Home Cinema News Vijay: தளபதி 67 படத்தில் 14 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் த்ரிஷா

Vijay: தளபதி 67 படத்தில் 14 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் த்ரிஷா

60
0

Vijay: நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நிலையில், தற்போது விஜய் அடுத்த படமான ‘தளபதி 67’ என தற்காலிகமாக குறிப்பிடப்படும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also Read: லெஸ்பியன் காதலை மையமாகக் கொண்ட மலையாளப் படம் ஹோலி வூண்ட் OTT ரிலீஸ் தேதி

தற்போது விஜய்யின் அடுத்த படம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது. மேலும் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தளபதி 67’ படத்தை இயக்க கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட இந்நிலையில் தற்போது படத்தின் சமீபத்திய செய்தி நடிகை த்ரிஷா ‘தளபதி 67’ படத்தில் இணைவதாக செய்தி வந்துள்ளது. நடிகை சமந்தா தான் முன்னணி நாயகியாக நடிக்க இருப்பதாக முன்பே தெரிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தில் விஜய்யின் மனைவியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  Hot News: ரஜினி-கமல் நடித்த படத்தின் ரீமேக்கில் இணையும் சிம்பு-ஃபஹத் பாசில் மற்றும் ஸ்ருதிஹாசன்

Vijay: தளபதி 67 படத்தில் 14 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடிக்கும் த்ரிஷா

த்ரிஷா மற்றும் விஜய்யின் அதிர்ஷ்ட கூட்டணியாக கருதப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படத்தில் நடித்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பின் 14 வருடங்களுக்கு பிறகு த்ரிஷா ஐந்தாவது முறையாக விஜய்யுடன் ஜோடியாக நடிக்கிறார். இந்த செய்தி பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply