Home Cinema News Rathnam: விஷாலின் ‘ரத்னம்’ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது

Rathnam: விஷாலின் ‘ரத்னம்’ படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது

0

Rathnam: விஷாலின் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமான ‘ரத்னம்’ கோடைக்கால வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. ஹரி இயக்கிய இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. ‘எதனால எதனால’ விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் இடையேயான காதலை காட்டும் தென்றல் மெலடி பாடல் இது.

Ethanaala Lyrical Video |(Tamil ) | Rathnam | Vishal, Priya Bhavani Shankar | Hari | Devi Sri Prasad

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த மெய்சிலிர்க்க வைக்கும் பாடலில் சிந்துரி விஷாலின் அழகான குரல்களும், விவேகாவின் மனதை தொடும் வரிகளும் இடம்பெற்றுள்ளன. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ரத்னம்’. ‘தாமிரபரணி’, ‘பூஜை’ ஆகிய வெற்றிப்படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக விஷாலும் மற்றும் இயக்குநர் ஹரியும் இணைந்துள்ள படம் இது.

Rathnam: விஷாலின் 'ரத்னம்' படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது

விஷால், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, யோகி பாபு, கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘ரத்னம்’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக எம்.சுகுமார், படத்தொகுப்பாளராக டி.எஸ்.ஜெய், கலை இயக்குநராக பி.வி.பாலாஜி, கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலிப் சுப்பராயன், விக்கி ஆகியோரின் சண்டைக்காட்சிகள் உள்ளது. இரண்டாவது சிங்கிள் தற்போது ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version