Jailor: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மலையாள பிரபல நடிகர் மோகன்லால் மற்றும் கன்னட பிரபல நடிகர் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் இப்படத்தில் உள்ளனர். தமன்னா சமீபத்தில் படப்பிடிப்பில் இணைந்தார்.
Also Read: விஜய் நடித்த வாரிசு படத்தின் மொத்த வசூல் – தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு
ஜெயிலர் படத்தின் டீசர் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ‘ஜெயிலர்’ படத்தில் முத்துவேல் பாண்டியன் வேடத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியானது. மேலும் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்துள்ளது. படக்கழுவினர் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஜெயிலர் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
தற்போது செய்தி என்னவென்றால், படத்தை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. தள்ளிப் போனதற்கு காரணம் பொன்னியின் செல்வன் பார்ட் 2. பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28 அன்று திரைக்கு வரவுள்ளதாக அதிகாரபூர்வ அறிக்கை வந்ததால், அந்த படத்துடன் மோதாமல் இருக்க ஜெயிலர் படத்தை தள்ளி வைப்பதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்த விஷயம் அனைவரும் அறிந்ததே.