Home Cinema News Cobra: விக்ரம் கோப்ரா படக்குழு எடுத்த அதிரடி முடிவு

Cobra: விக்ரம் கோப்ரா படக்குழு எடுத்த அதிரடி முடிவு

61
0

Cobra: அஜய் ஞானமுத்து இயக்கும் கோப்ரா படத்தில் விக்ரம், ஶ்ரீநிதி ஷெட்டி கே. எஸ் ரவிக்குமார், ரோபோ ஷங்கர், மிருணாளினி, ஆனத்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை புயல் ஏ.ஆர் ராகுமான் இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்க்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். புவன் சீனிவாசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Also Read: உலகளவில் திருச்சிற்றம்பலம் 2ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

சியான் விக்ரம் நடிப்பில் சைன்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாகி இருக்கும் கோப்ரா திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ஆவலோடு எதிர்பார்த்து காத்துகொண்டிருந்த ரசிகர்களுக்கு, மிகப்பெரிய விருந்தாக வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விதவிதமான கெட்டப்பில் அசத்தியுள்ளார் சியான் விக்ரம். தற்போது இந்த படத்தின் புரொமோஷன் வேலைகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  Prince 3rd Single Who Am I: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் 3-வது சிங்கிள் வெளியாகியுள்ளது

Cobra: விக்ரம் கோப்ரா படக்குழு எடுத்த அதிரடி முடிவு

கோப்ரா படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்க்கு யூஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதோடு இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 55 நிமிடம் இருப்பதால் படக்குழுவினர் ரன்னிங் டைம் குறைப்பதற்கு அதிரடி முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
கோப்ரா படத்தின் சென்சார் பணிகள் முடிந்ததும் புரொமோஷன் வேலைகளை தீவிரப்படுத்த உள்ளனர். இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply