Home Cinema News Leo: தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் வெளிநாட்டு வர்த்தகத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது

Leo: தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் வெளிநாட்டு வர்த்தகத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது

0

Leo: விஜய் புதிய சாதனைகளை படைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். விஜய்யின் புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் சாதனை படைத்து வரும் நிலையில், விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படம் வர்த்தகத்தில் தமிழ் சினிமாவுக்கு புதிய உச்சத்தை பதித்து வருகிறது. சமீபத்திய தகவல்களின்படி, லியோ படத்தின் வெளிநாட்டு உரிமையை 60 கோடி ரூபாய்க்கு ஃபார்ஸ் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. இது விஜய்யின் முந்தைய பிஸ்ட மற்றும் வாரிசு படத்தின் விலையை விட கிட்டத்தட்ட இருமடங்காகும் அதிகம். மேலும் இந்த படம் வெளிநாட்டு வியாபாரத்தில் தமிழில் இது அதிக என்றும், தென்னிந்தியாவில் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய ‘சலார்’ படத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வர்த்தகம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா

மறுபுறம், லியோ படத்தின் புதிய ஷெட்யூல் நாளை (ஏப்ரல் 5) சென்னையில் தொடங்க உள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டிக்கு படக்குழு செல்வதற்கு முன், விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்படவுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 22 அன்று வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் சூசகமாகத் தெரிவித்தார்.

Leo: தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் வெளிநாட்டு வர்த்தகத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது

இப்படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா DOP மற்றும் எடிட்டிங் பிலோமின் ராஜ். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் தி ரூட் இணைந்து தயாரித்துள்ள லியோ, அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version