Home Cinema News Rajinikanth: ‘லால் சலாம்’ படபிடிப்பின் போது தனது ரசிகர் கூட்டத்தை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Rajinikanth: ‘லால் சலாம்’ படபிடிப்பின் போது தனது ரசிகர் கூட்டத்தை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

41
0

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்புதான் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக முடித்தார் என்ற செய்தியை நாம் அனைவரும் அறிந்தோம். பழம்பெரும் நடிகர் தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கதில் உருவாகி கொண்டிருக்கும் ‘லால் சலாம்’ படத்தில் தனது நீட்டிக்கப்பட்ட கேமியோவிற்காக மீண்டும் களமிறங்குகிறார்.

மும்பையில் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பாண்டிச்சேரியில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினார். தலைவர் ரஜினிகாந்த் பாண்டிசேரியில் படபிடிப்பில் இருக்கிறார், என்பதை அறிந்ததும், இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டாரைப் பார்க்க ரசிகர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர். ரஜினி தனது காரின் மேற்கூரையில் ஏறி கூட்டத்தினருடன் உரையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ALSO READ  Jawan OTT: ஜவான் இந்த தேதியில் OTT-யில் அறிமுகமாகும்

Rajinikanth: 'லால் சலாம்' படபிடிப்பின் போது தனது ரசிகர் கூட்டத்தை சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள லால் சலாம் கிரிக்கெட் அடிப்படையிலான விளையாட்டு நாடகமாகும். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மூத்த நடிகை ஜீவிதா ராஜேஸ்கர் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, பிரவின் பாஸ்கர் படத்தொகுப்பு செய்கிறார்.

 

Leave a Reply