Home Cinema News SK23: வைரலாகும் சிவகார்த்திகேயனின் ‘SK23’ பட பூஜை புகைப்படங்கள்

SK23: வைரலாகும் சிவகார்த்திகேயனின் ‘SK23’ பட பூஜை புகைப்படங்கள்

129
0

SK23: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ‘SK23’ என்ற புதிய படத்தை அறிவித்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முஹுரத் பூஜையுடன் துவங்கியதாக செய்திகள் நாம் படித்தோம். இன்று ஏ.ஆர்.முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK 23’ திரைப்படம் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் முன்னிலையில் நேற்று பூஜை நடைபெற்ற நிலையில், இன்று படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.

ALSO READ  Special gift for Nayanthara: விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு பிறந்தநாள் சிறப்பு பரிசு அறிவித்தார்

SK23: வைரலாகும் சிவகார்த்திகேயனின் 'SK23' பட பூஜை புகைப்படங்கள்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது வித்தியாசமான கதைக்களத்தில் கதை உருவாக்கவுள்ளார். ருக்மணி வசந்த் ‘SK23’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சுதீப் இளமன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், அருண் வெஞ்சரம் கலை இயக்கத்தையும் கவனிக்கிறார். மாஸ்டர் திலீப் சுப்புராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த முழு விவரங்கள் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். ஆதாரங்களின்படி, ‘SK23’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க மோகன்லால் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோரை படக்குழு அணுகியுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply