Home Cinema News Breaking: சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

Breaking: சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

43
0

Maaveeran: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரஜினி படத்துடன் நேரடி மோதலைத் தவிர்க்க ‘மாவீரன்’ படக்குழு மாற்றுத் தேதியைத் தேடுவதாக பரவலாகப் பேசப்பட்டது.Breaking: சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதுதயாரிப்பாளரான சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக “எங்கள் ‘மாவீரன்’ உங்களை உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் சந்திக்கும் – மிக விரைவில் இந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி” என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர்ருடன் சரிதா, யோகி பாபு, சுனில் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்திற்கு வித்து ஐயனார் ஒளிப்பதிவு செய்கிறார், பிலோமின்ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ALSO READ  Indian 2: உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை பற்றின முக்கிய தகவல்

Leave a Reply