Home Cinema News Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டது

Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டது

0

Amaran: அமரன் என்ற தேசபக்தி படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் நியமிக்கப்பட்ட மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு. முகுந்த் வரதராஜனுக்கு மரணத்திற்குப் பின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது அவர் செய்த செயல்களுக்காக அசோக சக்கரம் வழங்கப்பட்டது.

Amaran: சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டது

கடந்த சில நாட்களாக ரசிகர்களை உற்சாக படுத்தி வந்த படக்குழுவினர்கள் தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அமரன் தீபாவளி பண்டிகையின் போது அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளுக்கு வருகிறார். சிவகார்த்திகேயனின் போஸ்டருடன் வெளியீட்டு தேதியை வெளியிடனர் தயாரிப்பாளர்கள். இந்த படத்தை ரங்கூன் புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன், ஆர் மகேந்திரன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான அளவில் படத்தைத் தயாரிக்கிறார்கள், மேலும் இந்தப் படத்தின் மெது நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் அமரன் பல மொழிகளில் வெளிவரவுள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version