Home Cinema News Sivakarthikeyan: வெங்கட் பிரபு படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்

Sivakarthikeyan: வெங்கட் பிரபு படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்

0

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘SK 21’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் அவரது பிறந்தநாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு, சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸுடன் ‘SK 23’ என்ற மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படத்திற்காக இணையவுள்ளார்.

தளபதி விஜய்யை வைத்து மூன்று பிளாக்பஸ்டர் படங்களை வழங்கிய ஏஆர் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மற்றொரு விஜய் பட இயக்குனருடன் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் பணியாற்றலாம் என பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. ஆம் தளபதி விஜய்யின் தற்போதைய படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபுவுடன் அவர் இணைய வாய்ப்புள்ளதாக சமீபத்திய செய்திகள் கூறுகிறது.

Sivakarthikeyan: வெங்கட் பிரபு படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்

இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகிறது. ‘GOAT’ படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அடுத்த ஆண்டு இந்த படத்தை இயக்குனர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது சிவகார்த்திகேயனின் ‘SK25’ ஆக இருக்கும் என்றும், ‘SK 24’ புதிய காம்போவாக இருக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘பிரின்ஸ்’ ப்ரோமோஷன் நிகழ்வில் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்றுவதை உறுதிப்படுத்தினார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version