Home Cinema News Sivakarthikeyan: SK 20 யில் RRR நடிகையா?

Sivakarthikeyan: SK 20 யில் RRR நடிகையா?

111
0

சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 20 யில் RRR நடிகை நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan: SK 20 யில் RRR நடிகையா?
மெரினா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது தனது 20தாவது பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து அசுர வளர்ச்சியடைந்த சிவகார்த்திகேயன் திரைப்பட தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகர் என்று பன்முக திறமைகளோடு சிறந்தவராக இருந்து வருகிறார். நயன்தாராவின் கோலமாவு கோக்கில் படத்தில் எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சி டி என்ற படலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது வெளியான டாக்டர் படத்திலும் செல்லமா பாடலை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதோடு விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்காக அரபிக் குத்து என்ற பாடலை எழுதி அதற்காக வாங்கிய சம்பளத்தை மறைந்த பாடலாசிரியர் நா. முத்துகுமார் குடும்பத்திற்கு வழங்கி ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

ALSO READ  Official: யோகி பாபுவும் மற்றும் சிம்புதேவன் புதிய படத்தில் இணைகிறார்கள் - தலைப்பு அறிவிப்பு வீடியோ

தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர் பட வெற்றியை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் நடித்திருக்கும் டான் படம் வருகிற மார்ச் 25 ஆம் தேதி அன்று வெளியாகயுள்ளது. அனுதிப் இயக்கத்தில் வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன் இணைந்தது தயாரிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். அந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் கைடாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தின் முதல் கட்ட படபிடிப்பு காரைக்குடியில் பூஜையுடன் தொடங்கினார்கள். அதன்பின் லண்டனில் முக்கியமான கட்சிகள் படமாக்குவதோடு படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு பாண்டிச்சேரியில் நடக்க இருக்கிறது.

ALSO READ  About Thunivu: துணிவு படத்தின் பற்றி - துணிவு படத்திற்கு பின் இயக்குனர் என்ன திட்டம் வைத்துள்ளார்

Sivakarthikeyan: SK 20 யில் RRR நடிகையா?
SK-20யில் RRR படத்தில் நடித்த ஒலிவியா மோரிஸ் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply