Home Cinema News Salaar: பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘சலார்’ டீசர்

Salaar: பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘சலார்’ டீசர்

0

Salaar: ரெபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ‘கேஜிஎஃப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இணைந்து பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படமான ‘சலார்’, பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் இறுதியாக இன்று முதல் டீசரை வெளியிட்டது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த டீஸர் ‘கேஜிஎஃப்’ கதையின் அதே பாணியில் அமைக்கப்பட்டுள்ளது, கைத்துப்பாக்கிகள், கனரக துப்பாக்கிகள் மற்றும் வாள்களுடன் எதிரிகளை எதிர்த்துப் போராடும் பிரபாஸின் கதாபாத்திரத்தின் காட்சிகள் காட்டப்பட்டன. 106 வினாடிகள் நீளமுள்ள டீஸரில் எளிமையான ஆங்கிலத்தில் மிகக் குறைந்த வசனங்கள் உள்ளன, மேலும் அனைத்து மொழிகளுக்கும் பொதுவானதாக வெளியிடப்பட்டது.

Salaar: பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'சலார்' டீசர்

பவர்ஹவுஸ் டீஸர் ரவி பஸ்ரூரின் அட்டகாசமான இசையமைப்பு மற்றும் புவன் கவுடாவின் மூச்சடைக்கக்கூடிய காட்சிகள் மற்றும் உஜ்வல் குல்கர்னியின் துடிப்பான எடிட்டிங்கில் உருவாக்கப்பட்டது. டீசரில் நிறைய நவீன கால வீரர்களையும் போர் முறைகளையும் நாம் பார்ப்பதால் சலார் ஒரு சமகால உலகில் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. கொடிய வில்லனாக பிருத்விராஜ் சுகுமாரனின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளிப்படுத்தும் கட்சியுடன் வீடியோ முடிகிறது. முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, சலார் பல பாகங்களாக வெளியிடப்படும்.

செப்டம்பர் 28, 2023 அன்று சலார் பகுதி 1: வெள்ளித்திரையை ஒளிரச் செய்யத் தயாராக உள்ளது என்பதை ‘சலார்’ முதல் டீசர் வெளிப்படுத்துகிறது. இதில் பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், பிருத்விராஜ் சுகுமாரன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய படங்களில் ஒன்றாகும்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version