Home Cinema News Rajinikanth: ‘கூலி’ படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் ரஜினிகாந்த்

Rajinikanth: ‘கூலி’ படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் ரஜினிகாந்த்

252
0

Rajinikanth: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். மேலும் அவர் தனது அடுத்த படத்திற்கு அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடாத நிலையில், தற்போதைய புதிய செய்தி என்னவென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜுடன் புதிய படத்தில் இணையகிறார் என்ற செய்தி கோலிவுட்டில் பரவி வருகிறது. ரஜினிகாந்த் இதற்கு முன்பு கார்த்திக் சுப்புராஜுடன் இணைந்து பணியாற்றிய ‘பேட்ட’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  Bigg Boss Kondattam 6: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நட்சத்திரங்களின் பிக் பாஸ் கொண்டாட்டம் தொடங்கியது

‘கூலி’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக ரஜினிகாந்த், கார்த்திக் சுப்பராஜுடன் இணைய வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அனால், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நிலுவையில் உள்ளன. வேலை முன்னணியில் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’ திரைப்படம் பெரிய திரைகளில் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ராணா டகுபடி. ஃபகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

ALSO READ  Maaveeran: சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் வெளியீட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது

Rajinikanth: ‘கூலி’ படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜுடன் இணையும் ரஜினிகாந்த்

போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது. இந்த படத்தின் டப்பிங் பணியை முடித்த ரஜினிகாந்த் விரைவில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். கடந்த ஆண்டு வெளிவந்து ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்தது. நெல்சன் திலீப்குமாரின் ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கான ஸ்கிரிப்ட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

Leave a Reply