Home Cinema News Rojamouli: மீண்டும் ஆர்.ஆர்.ஆர் கூட்டணியில் ராஜமௌலி படம்

Rojamouli: மீண்டும் ஆர்.ஆர்.ஆர் கூட்டணியில் ராஜமௌலி படம்

47
0

Rajamouli: இயக்குனர் ராஜமௌலி தனது படைப்புகளின் மூலம் வசூலை குவித்து வருகிறார். அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்கு வசூல் வேட்டை ஆடினார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் வேட்டை 1000 கோடியை தாண்டியது. மீண்டும் அதே கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே RRR கூட்டணியில் இன்னொரு படத்தை இயக்க ராஜமௌலியிடம் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று கேட்டுள்ளது. ராஜமௌலியும் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனால் இப்படம் மிக விரைவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  KH234: கமல்ஹாசன் - மணிரத்னம் படத்தின் அறிவிப்பு நேரம் அறிவிக்கப்பட்டது

இந்நிலையில் தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை ராஜமௌலி இயக்கி வருகிறார். காடுகளை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அதாவது ரூ.500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது.

ALSO READ  RC16: ஜான்வி கபூரின் இரண்டாவது தென்னிந்தியத் திரைப்படம் அவரது பிறந்தநாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

Rojamouli: மீண்டும் ஆர்.ஆர்.ஆர் கூட்டணியில் ராஜமௌலி படம்

இந்த படம் முடிந்த கையோடு மீண்டும் RRR கூட்டணியில் படம் உருவாக வாய்ப்புள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும். மேலும் ராஜமௌலி தொடர்ந்து இதுபோன்ற பிரமாண்ட படங்களை தயாரித்து வசூலை குவித்து வருகிறார். இதனால் ராஜமௌலியின் படத்தை தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கின்றனர்.

மீண்டும் ஆர்ஆர்ஆர் கூட்டணியில் உருவாகும் இப்படம் நிச்சயம் ரூ.1000 கோடியை வசூலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply