விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு பாக்யாராஜின் நடிப்பில் உருவாகிய இராவண கோட்டம் திரைப்படம் மே 12இல் வெளியாகி உலகெங்கும் நல்ல விமர்சனங்களை பெற்று பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கண்ணன் ரவி தாயாரித்த இந்த கிராமிய திரைப்படம் ஒரு கிராமத்தின் இரண்டு சமூகத்திற்கு இடையே நடக்கும் பிரச்னையை மையமாக வைத்து உருவாகியது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
தற்போதைய செய்தி என்னவென்றால் இப்படம் ஒரு குறிப்பிட்ட சமூக தலைவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் அவப்பெயர் வரும் கேவலமான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதை ரிலீசிற்க்கு முன்பே முதலில் ஆரம்பித்தது சில ஊடக நண்பர்கள்
இப்போது அவர்களாலேயே மீண்டும் அது வைரலாகி ஆகி படத்தை நிறுத்த கோரும் போராட்டம் உருவாகும் சூழ்நிலை புகைவதாக தெரிகிறது. சென்சார் ஆன திரைப்படத்தை அப்படி தடை செய்தால் தீவிர உண்ணாவிரத போராட்டத்தில் கதாநாயகன் சாந்தனுவின் அப்பா பாக்கியராஜ் ஈடுபட தயாராகி வருகிறார். இந்த செய்தி கேள்விப்பட்ட சிஷ்யன் R. பார்த்திபன் தன குருநாதருக்கு தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்து போராட்டத்தை தவிர்க்க கோரியுள்ளார்.
இதனிடையே தொல் திருமாவளவனும், சீமானும் இப்படத்தை பாராட்டியுள்ளனர்
தற்போது இந்த செய்தி viral ஆக மாறி உள்ளது.