Box Office: மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி ரசிகர்களை திரையரங்குகளுக்கு இழுத்துள்ளது. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அதே பெயரில் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 2022 இல் வெளியானபோது பிரம்மாண்டமான தொடக்கத்தைப் பெற்றது. இது ஒரு தமிழ்த் திரைப்படத்திற்கான மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றுதந்தது. ஒட்டுமொத்தமாக, உலகம் முழுவதும் ரூ 500 கோடிக்கும் அதிகமான மொத்த வசூலுடன் திரையரங்குகளில் அதன் ஓட்டத்தை முடித்தது. இப்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெற்றிகரமாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் முதல் நாள் மட்டுமே ரூ.35 வரை வசூல் செய்துள்ளது. மொத்த உள் நாட்டு வசுலுடன் தொடங்கபட்ட இப்படம் விஜய்யின் வாரிசு படத்தை விட நல்ல ஓப்பனிங்கை இப்படம் பெற்றுள்ளது. அறிக்கைகளின்படி, பிஎஸ்-2 வெளியான நாளில் உலகம் முழுவதும் ரூ.65 முதல் 60 கோடி வரை சம்பாதித்தது. இப்படம் இந்தியா முழுவதும் ரூ 35 கோடி வசூலித்ததாகவும் தமிழ் நாட்டில் மட்டும்25 கோடி வரை வசூல் செய்ததாகாக கூறப்படுகிறது.
வாரிசு படத்தை பீட்டிங் செய்வதன் மூலம் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மாநிலத்தில் ஆண்டின் இரண்டாவது சிறந்த ஓப்பனிங்கைப் பெற்றது. தளபதி விஜய்யின் வாரிசு படம் இந்தியா முழுவதும் வெளியான முதல் நாளில் ரூ 26.5 கோடி வசூலித்தது என்று திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் கூறியுள்ளார்.
பொன்னியின்செல்வன் 2 அமெரிக்காவில் வியாழக்கிழமை அன்று முதல் 10 இடங்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த காவிய நாடகம் அமெரிக்காவிலும் நல்ல தொடக்கத்தைப் பெற்றதாகப் பகிர்ந்து கொண்டார் இந்தஸ்ரி ட்ராக்கர் ரமேஷ் பாலா. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கூட படம் நன்றாகத் திறக்கப்பட்டது என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.