Home Cinema News VJS-50: விஜய் சேதுபதியின் 50வது படத்தை பற்றி கூறிய தயாரிப்பாளர் சுதன்

VJS-50: விஜய் சேதுபதியின் 50வது படத்தை பற்றி கூறிய தயாரிப்பாளர் சுதன்

106
0

VJS-50: விஜய் சேதுபதி பன்முக நடிப்பு திறைமை கொண்டவர். சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்தில் தனது சிறந்த நடிபினாலும் பேச்சினாலும் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர் ஆதானல் இவரை ‘மக்கள் செல்வன்’ என்று கூறுகின்றனர். இவர் குறும்படங்கள் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மற்றும் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார். இன்று இந்தியாவில் அதிகம் தேடப்படும் ஹீரோக்களில் இவரும் ஒருவர். தற்போது 50 ஆவது படத்தை எட்டியுள்ளார்.

ALSO READ  Bigg Boss S6: பிக் பாஸ் தமிழ் S6 ஐந்தாம் வாரம் எலிமினேஷனுக்கு ஆபத்து நிலையில் மூன்று போட்டியாளர்கள்

VJS-50: விஜய் சேதுபதியின் 50வது படத்தை பற்றி கூறிய தயாரிப்பாளர் சுதன்

விஜய்சேதுபதி நடிக்கும் 50 ஆவது படத்தின் தயாரிப்பாளர் சுதன் கூறுகையில், ​​“எங்கள் தயாரிப்பில் உருவாகும் படம் விஜய் சேதுபதியின் 50வது படம் என்று எங்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. பழிவாங்கும் நடகமான இந்தப் படத்தில், இரண்டு தோற்றத்தில் அவர் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 85 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டு, இதுவரை 50 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம். அடுத்த 10 நாட்களில் விஜய் சேதுபதியின் பாகங்கள் முடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ALSO READ  Kollywood: 'சூர்யா 43' படத்தின் முதல் ஷெட்யூல் இந்த இடங்களில் படமாக்கப்படும் - ஹாட் அப்டேட்

‘பாய்ஸ்’ மணிகண்டன், அருள் தாஸ், முனிஸ்காந்த், நட்டி நட்ராஜ் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளராக அஜனீஷ் லோக்நாத் (கந்தாரா புகழ்), ஒளிப்பதிவாளராக தினேஷ் புருஷோத்தமன், எடிட்டராக பிலோமின் ராஜ், கலை இயக்குநராக செல்வகுமார் ஆகியோர் பணிபுருகின்றனர்.

Leave a Reply