Home Cinema News PS1-1 Box office collection: பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் 6-வது நாள் வசூல்

PS1-1 Box office collection: பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் 6-வது நாள் வசூல்

0

PS1-1: பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30 அன்று ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல பதிலைப் பெற்றது. இயக்குனர் மணிரத்னத்தின் PS 1 பாக்ஸ் ஆபிஸில் பிரமாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வர்த்தக அறிக்கையின்படி, இப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ 300 கோடியைத் தாண்டியுள்ளதாகவும், இன்னும் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் மேலும் பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது.

PS1-1 Box office collection: பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸ் 6-வது நாள் வசூல்

  • உலகளவில் 300 கோடி ரூபாய் தாண்டியுள்ள பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் 1 ஆறு நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 300 கோடியைத் தாண்டிதாக செய்திகள் வந்துள்ளது. இந்த விகிதத்தில் இன்னும் சில வாரங்களுக்கு இந்த படம் பிரம்மாண்டமான ஓட்டத்தைத் தொடரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. தீபாவளி வரை பெரிய படங்கள் எதுவும் வராததால் பொன்னியின் செல்வனுக்கு பெரும் சாதகமாக அமைந்துள்ளது.

பொன்னியின் செல்வன் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பிரபல இலக்கிய தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு மற்றும் பார்த்திபன் ஆகியோர் துணை நடிகர்களாக உள்ளனர்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version