PS-1: இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திட்டமான ‘பொன்னியின் செல்வன்-1’. பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ஆடியோ நல்ல விலைக்கு விற்பனையாகி விட்டது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மற்றும் டிஜிட்டல் உரிமையை பிரபல முன்னணி OTT நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.
Also Read: Vijay: வாரிசு படம் ரிலீஸ் முன்பே ரூ.200 கோடி வசூல் – விஜய் புதிய சாதனை
விரைவில் திரைக்கு வரவுள்ள ‘பொன்னியின் செல்வன் 1’. மிக பெரிய அளவிற்கு தயாரிப்பாளர்கள் விளம்பர நிகழ்ச்சிகளை இப்படத்திற்கு நடத்தி வருகின்றனர். கோலிவுட் முன்னணி நடிகர்கள், மற்றும் பாலிவுட் அழகி ஐஸ்வர்யா ராய் பச்சனும் இந்த மிகப்பெரிய விளம்பர நிகழ்ச்சி திட்டத்தில் ஒரு பகுதியாக உள்ளார். மேலும், பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் இந்திய முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட போஸ்டர்கள் மற்றும் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Also Read: Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் படத்திற்கு ரஜினிகாந்த் டைட்டில் – வைரலாகும் வீடியோ
தற்போது ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ‘பிஎஸ்1’ படத்தின் ஆடியோவை பிரபல ஆடியோ நிறுவனமான டிப்ஸ் மியூசிக் வாங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆடியோ மட்டும் ரூ. 24 கோடிக்கு விற்க பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தற்போது ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தின் டிஜிட்டல் உரிமை எதிர்பாராத விலைக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிகிறது. பொன்னையன் செல்வன்-1 படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல OTT நிறுவனமான (அமேசான் பிரைம் வீடியோ) Amazon Prime Video வாங்கியுள்ளதாக தெரிகிறது. அதாவது ரூ.125 கோடிக்கு பிரமாண்ட விலைக்கு ஒப்பந்தம் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது. கோலிவுட்டிலேயே இதுதான் பெரிய OTT ஒப்பந்தமாக பேசபடுகிறது.
பொன்னையன் செல்வன் படத்தில் மல்டி ஸ்டார்கள் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் ஹீரோவாக நடிக்கின்றனர். ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா கிருஷ்ணன், சோபிதா துலிபாலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையை வழங்கியுள்ளார். இப்படம் 1995ல் கல்கி கிருஷ்ணமூர்த்தி பொன்னியன் செல்வனின் நாவலை அடிப்படையாகக் கொண்டது.
Also Read: Chandramukhi-2: மைசூரில் பூஜையுடன் தொடங்கிய சந்திரமுகி-2
இந்நிலையில் தமிழ் திரையுலகில் ரூ.500 கோடியில் தயாரிக்கப்பட்ட முதல் பெரிய பட்ஜெட் படமான ‘பொன்னியின் செல்வன் 1’. முன்னணி தயாரிப்பு நிறுவனங்களான லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. PS1 செப்டம்பர் 30 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. தமிழில் உருவாகும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது.