Home Cinema News PS Teaser Release: பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு!

PS Teaser Release: பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு!

0

Ponniyan Selvan: அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். இன்நாவலை தழுவி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

பொன்னியின் செல்வன்:

லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்தது பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கிவருகிறார். 1950களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் எல்லாரும் விரும்பி பாடக்கூடும் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர் படமாக்கி நடிக்க நினைத்தார். ஆனால் அது முடியாமல் போக கமல்ஹாசன் முயற்சி செய்து முடியாத நிலையில் தற்போது பலரது கனவு படம் மணிரத்னத்தின் நினைவு படமாக உருவாகி கூடியவிரைவில் திரைக்குவரவுள்ளது.

Also Read: அஜித்குமார் லண்டனில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்க்கு வருகை – வீடியோ வைரல்!

ஏ.ஆர் ரகுமான் இசையில் விக்ரம், கார்த்திக், ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், பிரபு, பார்த்திபன், சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 10 ஆம் நூற்றாண்டில் சோழ பேரரசரின் அரியணைகாக திரோகங்களையும், தியாகங்களையும் அடிப்படையாக கொண்டு இளவரசன் அருள்மொழிவர்மன் பேரரசன் இராஜராஜன் பதவியேற்று சோழர்களின் பொற்காலத்தை உருவாகும் ஒரு சாகச கதை பொன்னியின் செல்வன்.

PS Teaser Release: பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகும். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் நிலையில் இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளார்.

Also Read: நடிகர் விஜய்யின் வாரிசு படக் கதை இதுதானா? – வசனகர்த்தா விளக்கம்

டீசர் வெளியீடு:

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் நாளை நாதம்பக்கம் வர்த்தக மையத்தில் நாளை மாலை 6 மணி அளவில் படத்திற்கான டீஸர் வெளியீடு நிகழ்ச்சி நடைபெறயிருகிறது என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. திரைபிரபலகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளர்கள் என்று கூறபடுகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version