Home Cinema News Nayanthara: முக்கிய அறிக்கையை டைப் செய்யும் நயன்தாரா – வெளியான ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர்

Nayanthara: முக்கிய அறிக்கையை டைப் செய்யும் நயன்தாரா – வெளியான ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர்

48
0

Nayanthara: 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நம்பர் ஓன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தற்போது பாலிவுட்டில் ஷாருக்ஹானுடன் ஜாவான் படத்தில் நடிக்கிறார். அதோடு மலயலத்தில் கோல்ட், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த காட் ஃபாதர் படங்கள் இந்த ஆண்டே திரைக்கு வரவுள்ளது. மெகாஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் காட்பாதர். மோகன் ராஜா இயக்கிய இப்படம், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி, தெலுங்கு மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ALSO READ  Thalapathy 69: தளபதி விஜய்யின் 69 வது அரசியல் திரைப்படத்தை இந்த இயக்குனர் இயக்குகிறார்

Also Read: திரையரங்குகள் மற்றும் OTT-யில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் & தொடர்கள்

இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இன்று, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சத்யப்ரியா ஜெய்தேவ் என்ற கேரக்டரில் நடிக்கும் நயன்தாராவின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. அந்த முதல் பார்வையில் நயன்தாரா பார்பதற்கு ஒரு அரசாங்கத்தில் வேலை பார்க்கும் அதிகாரியாக, பரபரப்பாக ஒரு முக்கிய அறிக்கையை டைபிங் செய்வதுபோல் தெரிகிறார். இந்த போஸ்டர் தற்போது நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பபை பெற்று வருகிறது.

ALSO READ  Jailer: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் தலைப்பில் சிக்கல் - சட்ட அறிக்கையை வெளியிட்ட தயாரிப்பாளர்

Nayanthara: முக்கிய அறிக்கையை டைப் செய்யும் நயன்தாரா - வெளியான ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர்

சத்ய தேவ், பூரி ஜெகநாத், சுனில் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கொனிடேலா புரொடக்‌ஷன் நிறுவனம் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply