Rajinikanth: லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்தின் திடீர் சந்திப்பு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வரலாறு காணாத வெற்றிக்குப் பிறகு, இப்போது தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் விரும்பப்படும் இயக்குனராக இருக்கிறார். தற்போது அவர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடினமான சூழ்நிலையில் தளபதி விஜய்யின் புதிய படமான ‘லியோ’ படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். தமிழ் படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இப்படம்.
இதற்கிடையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜை அழைத்து, இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அல்லது 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவருக்கு தேதிகள் இருப்பதாக உறுதியளித்து அவருக்கான ஸ்கிரிப்டை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டதாக கோலிவுட்டில் பேசபட்டு வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சந்திப்பு கேள்விக்குள்ளாக்குகிறது.
ரஜினியை இயக்குவது ஒரு அரிய வாய்ப்பு என்பதால் லோகேஷ் மற்றும் அவரது குழுவினர் கமல் மற்றும் கார்த்தியின் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச திட்டமிட்டு ரஜினி படத்தை ஏற்க அனுமதிக்க அவர்களின் அட்டவணையில் மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 169’ படத்தை இயக்க கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் லோகேஷ் கனகராஜை ஒப்பந்தம் செய்தது என்று நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று. ஆனால் கரோனா தொற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை. அந்தத் திட்டத்துக்குப் பதிலாக ‘விக்ரம்’ படம் உருவாகி வரலாறு படைத்தது. 2019 இல் ரஜினியும் லோகேஷும் விவாதித்த அதே ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுப்பார்களா அல்லது இது புத்தம் புதியதாக இருக்குமா என்பது இப்போது வரை தெரியவில்லை. இந்த பரபரப்பான கதை எவ்வாறு உருவாகிறது மற்றும் இந்த காம்போ நடக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி பொறுதிருந்து தான் பார்க்கவேண்டும்.