Home Cinema News Suriya 42 : தயாரிப்பு தரப்பில் இருந்து வெளிட்ட ‘சூர்யா 42’ படத்தின் சமீபத்திய அப்டேட்.!

Suriya 42 : தயாரிப்பு தரப்பில் இருந்து வெளிட்ட ‘சூர்யா 42’ படத்தின் சமீபத்திய அப்டேட்.!

133
0

Suriya 42 : சூரியா இப்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் தற்போது ‘சூரியா 42’ என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பு இந்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சூரியா 42 படத்தின் கதை கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் என பல்வேறு காலகட்டங்களில் நடப்பதாக ஏற்கனவே நாம் அறிந்ததே. நிகழ்காலம் காட்சிகளை படமாக்கிய படக்குழுவினர் விரைவில் கடந்த கால காட்சிகள்கான படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஸ்டுடியோ கிரீன் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்செயன், இந்த மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தை பற்றின புதிய அப்ட்டேடை வெளியிட்டார். பிளாஷ்பேக் காட்சிகளின் படப்பிடிப்பு 60 முதல் 80 நாட்கள் வரை நடைபெறும் என்றும் படத்திற்காக மொத்தம் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். சூரியா 42 படத்தின் முதல் பாகம் தான் என்றும், அதன் தொடர்ச்சிக்கான கதை தயாரிப்பாளர்களிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ALSO READ  VTK Box Office Day 4: வெந்து தணிந்தது காடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 4

Suriya 42 : தயாரிப்பு தரப்பில் இருந்து வெளிட்ட 'சூர்யா 42' படத்தின் சமீபத்திய அப்டேட்.!

சூர்யா 42 படத்தில் யோகி பாபு, கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ் மற்றும் ரவி ராகவேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைகிறார். எழுத்தாளர்கள் மதன் கார்க்கி மற்றும் ஆதி நாராயணா, ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிசாமி, கலை இயக்குநராக மிலன் மற்றும் எடிட்டராக நிஷாத் யூசுப் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

Leave a Reply