Home Cinema News Sardar official: கார்த்தியின் சர்தார் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு

Sardar official: கார்த்தியின் சர்தார் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு

109
0

Sardar: பிரின்ஸ் பிக்சர்ஸ் பேனரின் கீழ் எஸ்.லக்ஷ்மண் குமார் தயாரித்து வரவிருக்கும் தமிழ் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் சர்தார் படத்தை பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார், மற்றும் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா மற்றும் முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்க்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு ஜார்ஜ் சி. வில்லியம், எடிட்டிங் ரூபன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

ALSO READ  Kollywood: விஜய்யின் தளபதி 68 திரைப்படத்தின் கதாநாயகி இவர்தான்?

Also Read: முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே வந்த பிக் பாஸ் தமிழ் S6 – வைரல் வீடியோ

அக்டோபர் 21ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்ற இந்த பிரமாண்ட படத்தின் வெளியீட்டு தேதியை படத்தின் விநியோகஸ்தர் Red Giant Movies குழுவினர் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தனர். இந்த படத்தில் நடிகை லைலா பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  Mark Antony: விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் பிரம்மாண்ட மோஷன் போஸ்டர் இதோ!

Sardar official: கார்த்தியின் சர்தார் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு

தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், அதே நாளில் சர்தார் வெளியாகிறது. கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய இரண்டு தீபாவளி வெளியீடுகளும் அக்டோபர் 21 அன்று பாக்ஸ் ஆபிஸில் ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன. 2019 டிசம்பரில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ மற்றும் கார்த்தி நடித்த தம்பி ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியானதைத் தொடர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியின் மீண்டும் இரண்டாவது முறை மோதுகின்றனர்.

Leave a Reply