Kollywood: பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், பிரபு, ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகம் பிரம்மாண்டமாக உலக முழுவதும் திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பெங்களூரில் நடந்தது வருகிறது.
Also Read: மாவீரன்’ VS ‘ஜெயிலர்’ குறித்து சிவகார்த்திகேயனின் வெளிப்படையான பதில்.!
தற்போது செய்தி என்னவென்றால், நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், “நான் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் (ஹீரோ) நடிக்க விரும்பவில்லை. காரணம், எல்லா படத்துலயும் ஒரே மாதிரி நடிப்பைத்தான் இதில் வெளிப்படுத்த முடியும். வில்லன்கள் அப்படி இல்லை. கெட்டவனாக நடிக்கும்போது நடிப்புத் திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்று ஜெயம் ரவி தெரிவித்தார்.
பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக எப்படி நடிக்க வேண்டும் என்று நிறைய விஷயங்களை கற்றுத் தந்தார் மணிரத்னம். இந்த கேரக்டரில் நடிக்க நான் யாரையும் காப்பி செய்யவில்லை. ஏற்கனவே ராஜராஜசோழன் வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்து நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்தப் படத்தைப் பார்க்காமல் நடித்தேன். நான் அதைப் பார்த்தால், அவரது நடிப்பால் நான் பாதிக்கப்படுவேன். எனது நடிப்பு அவரது நடிப்பில் 10% கூட இல்லை. என்னால் முடிந்தவரை சிறப்பாக நடித்துள்ளேன்,” என்றார் ஜெயம் ரவி.