Home Cinema News Jailer: ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய அப்டேட் – மிகவும் உற்சாகத்தில் ரசிகர்கள்

Jailer: ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய அப்டேட் – மிகவும் உற்சாகத்தில் ரசிகர்கள்

133
0

Jailer: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வரவிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தனது ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். திரைப்படத்தின் குழு தற்போது முழுமையான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று நாங்கள் ஏற்கனவே உங்களுக்கு அறிவித்துள்ளோம்.

Also Read: AK 61: அஜித்தின் ‘ஏகே 61’ படப்பிடிப்பு படங்கள் மற்றும் வீடியோ கசிந்தது

இந்நிலையில் ஜெயிலர் பற்றிய லேட்டஸ்ட் செய்தி என்னவென்றால், தற்போது ஹைதராபாத் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட ஜெயில் செட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகனுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ  Rajinikanth: ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான கோல்டன் விசா பெற்று அபுதாபியில் உள்ள கோவிலுக்கு சென்ற ரஜினிகாந்த்

Jailer: ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய அப்டேட் - மிகவும் உற்சாகத்தில் ரசிகர்கள்

இந்த படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகிறது, ஜெயிலுக்குள் ஒரு கும்பல் சமூக விரோத செயலை திட்டமிடுகிறது, ரஜினி அந்த சமூக விரோத செயலை எப்படி நிறுத்துகிறார் என்பது கதை. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனுபவம் வாய்ந்த ஜெயிலராக நடிக்கிறார், மற்றும் ப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  PS-2 update: பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பை தொடங்குகிறார் மணிரத்னம்

Also Read: Chess: செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பு அழைப்பாளர்கள் – ரஜினி, அஜித்,கமல், விஜய்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க உள்ளார், மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும், ஐஸ்வர்யா ராய் பச்சன் பெண் கதாநாயகியாக இருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன.

Leave a Reply