Home Cinema News Kollywood: விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இந்த தேதியில் வெளியாகிறதா?

Kollywood: விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் இந்த தேதியில் வெளியாகிறதா?

59
0

Kollywood: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இப்படம் ஒரு தனித்துவமான அறிவியல் புனைகதை கேங்ஸ்டர் திரைப்படம் என்று கூறப்படுகிறது, பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் பேனரில் எஸ் வினோத் குமார் இப்படத்தை தயாரித்துள்ளார். காலகட்ட நாடகமான இப்படத்தில் விஷால் இரண்டு கெட்டப்புகளில் தோன்றுகிறார். எஸ். ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

ALSO READ  Kalvan: ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஐவனா புதிய படம் - மோஷன் போஸ்டர் பகிர்ந்த தனுஷ்

Kollywood: விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் 'மார்க் ஆண்டனி' திரைப்படம் இந்த தேதியில் வெளியாகிறதா?தற்போது வெளி வந்திருக்கும் சூடான தகவல் என்னவென்றால் மார்க் ஆண்டனி வருகிற ஜூலை மாதம் 28 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. தயாரிப்பாளர்கள் கூடிய விரைவில் அதிகாரபூர்வமாக படத்தின் தேதியை அறிவிப்பார்கள் என்று கூறுகின்றனர். ‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்தப் படத்திற்கு விஷால் 3 மொழிகளில் டப்பிங் பேசியிருக்கிறார்.

Leave a Reply