Home Cinema News Project K: மிகவும் எதிர்பார்கபட்ட ப்ராஜெக்ட் கே படத்தின் தலைப்பு இங்கே

Project K: மிகவும் எதிர்பார்கபட்ட ப்ராஜெக்ட் கே படத்தின் தலைப்பு இங்கே

46
0

Project K: பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் கமல்ஹாசனின் ப்ராஜெக்ட் கே தலைப்பு குறித்து பல எதிர்பார்ப்புகள் நிலவிவருகிறது. மிகபெரிய பஜெட்டில் உருவாகும் இந்த பான் இந்திய திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் தலைப்பு பற்றின தகவல் வெளிவந்துள்ளது.

ப்ராஜெக்ட் கே படத்தை பற்றின ஒரு அதிகாரப்பூர்வமான தகவலை நடிகர் பிரபாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் பகிர்ந்துள்ளார். ப்ராஜெக்ட் கே சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் சான் டியாகோவில் நடந்த காமிக்-கான் நிகழ்விற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம். படத்தின் முன்னணி நடிகர்களான பிரபாஸ், தீபிகா மற்றும் கமல்ஹாசன் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள இருகின்றனர். ப்ராஜெக்ட் கே படத்தின் க்ளிம்ப்ஸ் மற்றும் தலைப்புடன் ஜூலை 20 ஆம் தேதி அமெரிக்காவிலும் ஜூலை 21 ஆம் தேதி இந்தியாவிலும் வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் கூறியிருந்தார்கள் நாங்கள் இதற்கு முன் வெளியிட்டிருந்தோம்.

ALSO READ  Kollywood: தனுஷ் இயக்கத்தில் நடிப்பதற்கு ஜி.வி.பிரகாஷ் களமிறங்குகிறார்

Project K: மிகவும் எதிர்பார்கபட்ட ப்ராஜெக்ட் கே படத்தின் தலைப்பு இங்கே
தற்போது வெளிவந்திருக்கும் சூடான தகவல் என்னெவெனில், ப்ராஜெக்ட் கேயின் தலைப்பு காலச்சக்ரா என்று கூறப்படுகிறது, இது காலத்தின் ஓட்டம் உருவாக்கம் மற்றும் அழிவின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. எளிமையான சொற்களில், இது கால ஓட்டத்தைக் குறிக்கிறது மற்றும் பகவான் கிருஷ்ணரின் உதவியுடன் செயல்படுகிறது” டோலியுடில் நெருக்கமான நபர்கள் கூறுகின்றனர்.

 

மேலும், குருக்ஷேத்ரா என்பது திரையுலகில் பரவி வரும் மற்றொரு தலைப்பு என்றும் கூறுகின்றனர், திரைப்படத்தைச் சுற்றியுள்ள அனைத்து தகவல்களும் மகாபாரதத்தில் இருந்து அதன் தோற்றம் பற்றியது. மேலும் காவியக் கதையுடன் தொடர்புடையது, காலச்சக்ரா நிச்சயமாக தலைப்புகளில் ஒன்றாகும். இந்த மேலும் ஜூலை 20 அன்று இது அறிவிக்கப்பட்டவுடன் இறுதித் தலைப்பை அறிய முடியும். அது கால்சக்ராவாக இருக்கலாம் அல்லது குருக்ஷேத்ராவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த படம் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டது, இருபினும் இந்த காலத்திற்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது.

ALSO READ  Kollywood: சூர்யா மற்றும் துல்கர் சல்மான் இணைந்து நடிக்கும் படத்தின் இயக்குனர் இவர்தான்?

நாக் அஷ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள ப்ராஜெக்ட் கே அடுத்த ஆண்டு 2024 கோடை வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

Leave a Reply