Home Cinema News Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாகிறாரா சியான் விக்ரம் ?

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாகிறாரா சியான் விக்ரம் ?

0

Rajinikanth: இந்தியாவின் பல்துறை நடிகர்களில் ஒருவராக புகழப்பெற்ற சியான் விக்ரம். சமீபத்தில் வெளிவந்த மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’ மற்றும் ‘பொன்னியின் செல்வன் 2’ ஆகியவற்றில் ஆதித்த கரிகாலனாக பார்வையாளர்களை கவர்ந்தார். துரதிர்ஷ்டவசமாக, பா. ரஞ்சித்தின் ‘தங்கலான்’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிக்காக ஒத்திகை பார்க்கும்போது அவருக்கு விலா எலும்பு முறிந்தது, மேலும் ஒரு மாத ஓய்வுக்கு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தலைவர் 170’ திரைப்படம் இன்னும் சில வாரங்களில் துவங்கபடயுள்ள நிலையில், அதில் முக்கிய வில்லனாக நடிக்க விக்ரமை அணுகியுள்ளார் ஞானவேல். விக்ரமுக்கு கதையும், கதாபாத்திரமும் பிடித்திருந்தாலும் நெகட்டிவ் ரோலில் நடிக்க தயங்கினார்.

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வில்லனாகிறாரா சியான் விக்ரம் ?லைகா புரொடக்‌ஷன்ஸ் உரிமையாளர் சுபாஸ்கரன், விக்ரமுக்கு ஐம்பது கோடி ரூபாய் சம்பளம் கொடுத்துள்ளதாகவும், அதுவும் ஒரே பேமெண்ட்டில் தரபட்டுள்ளதாக தகவல் தெரிவிகின்றனர். லைகா நிறுவனம் ‘பிஎஸ்-1’ மற்றும் ‘பிஎஸ்-2’ ஆகிய இரண்டையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் நிறைவேறுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும், இப்போதெல்லாம் ஒரு சூப்பர்ஸ்டாருக்கு மற்றொரு ஸ்டார் வில்லனாக நடிப்பது டிரெண்ட் ஆகிவிட்டது. அந்த வகையில் ரஜினி, கமல்ஹாசன் மற்றும் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்திருந்தார். தற்போது சியான் விகரம் ரஜினியின் 170 ஆவது படத்தில் வில்லனாக நடிக்கவைக்க பேச்சி வார்த்தை நடந்து வருகிறது. இதை பற்றின அதிகார அறிவிப்பிற்கு நாம் காத்திருக்க வேண்டும்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version