Home Cinema News Kollywood: ராகவா லாரன்ஸ் நடித்த ‘சந்திரமுகி 2’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட் இதோ!

Kollywood: ராகவா லாரன்ஸ் நடித்த ‘சந்திரமுகி 2’ படத்தின் ரெட் ஹாட் அப்டேட் இதோ!

74
0

Kollywood: லைகா புரொடக்‌ஷன்ஸ் திரைப்பட ஆர்வலர்களின் சினிமா நாட்காட்டியை ஆண்டு முழுவதும் ஆக்கிரமித்துள்ளது மற்றும் பொழுதுபோக்கு படங்களின் நீண்ட வரிசையில் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது. பன்முக நட்சத்திரம் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள சந்திரமுகி 2, பார்வையாளர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பை வருகிறது. தற்போது இப்படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read: ஃபர்ஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியீட்டு நேரத்தை அறிவித்த கங்குவா தயாரிப்பாளர்கள்

சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ளது, மேலும் ராகவா லாரன்ஸ் தனது டப்பிங் பணிகளை முடித்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. அகாடமி விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இந்தப் படத்திற்கான பின்னணி இசையமைப்பை இன்று (ஜூலை 22) முதல் தொடங்கவுள்ளார். அடுத்த மாதம் வெளியிடப்படும் சந்திரமுகி 2 ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ALSO READ  Kollywood: இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 பற்றிய அப்டேட்டை கமல்ஹாசன் பகிர்ந்துள்ளார்

Kollywood: ராகவா லாரன்ஸ் நடித்த 'சந்திரமுகி 2' படத்தின் ரெட் ஹாட் அப்டேட் இதோ!

இத்திரைப்படத்தை மிகவும் பிரபலமான இயக்குனர் P. வாசு இயக்கியுள்ளார், இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், வடிவேலு, மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அகாடமி விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். தோட்ட தரணி தயாரிப்பு வடிவமைப்பையும், ஆண்டனி படத்தொகுப்பையும் கவனிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

ALSO READ  Official: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணையும் பிரபல தெலுங்கு ஹீரோ மற்றும் காமெடியன்

Kollywood: ராகவா லாரன்ஸ் நடித்த 'சந்திரமுகி 2' படத்தின் ரெட் ஹாட் அப்டேட் இதோ!

லைகா புரொடக்‌ஷன்ஸ், ராகவா லாரன்ஸ் மற்றும் வைகை புயல் வடிவேலு ஆகியோர் இணைந்த இந்த அற்புதமான படத்தின் அப்டேட் குறித்து சந்திரமுகி ஹார்ட்கோர் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர். சந்திரமுகி 2 செப்டம்பர் 15 அன்று விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

Leave a Reply