Home Cinema News Dhanush: ‘நானே வருவேன்’ படத்தின் முதல் விமர்சனம் – செல்வராகவன்-தனுஷ் கம்பேக்.

Dhanush: ‘நானே வருவேன்’ படத்தின் முதல் விமர்சனம் – செல்வராகவன்-தனுஷ் கம்பேக்.

0

Dhanush: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘சாணி காகிதம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனர் செல்வராகவன் நடிகராக ரசிகர்களிடம் பிரபலமானார். இவர் தளபதி விஜயின் பீஸ்ட் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி சமீபகாலமாக இவர் இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் அதிக ஆர்வம் கட்டிவருகிறார்.

தற்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் செல்வராகவன் தன்னுடைய தம்பி தனுசை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நானே வருவேன் படத்தில் நடித்திருக்கும் இரட்டை வேடத்தில் போஸ்டர்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். தயார் நிலையில் உள்ள இந்தப் படத்தை செல்வராகவன் முக்கியமானவர்களுக்கு போட்டு காட்டியுள்ளார். அதை பார்த்தவர்கள் மிரண்டு போயிருக்கின்றனர்.

இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் செல்வராகவன் பிரமாதமாக இயக்கி இருப்பதாக உற்சாகத்துடன் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டில் வெளியான ‘மயக்கம் என்ன’ திரைப்பட பாணியில் நானே வருவேன் திரைப்படம் பக்கா ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.

Dhanush: 'நானே வருவேன்' படத்தின் முதல் விமர்சனம் - செல்வராகவன்-தனுஷ் கம்பேக்.

ஏற்கனவே தனுஷ் படங்கள் பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நிலையில். சமீபக்கலாமா தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், தாகற்போது செல்வராகவன் இயக்கி இருக்கும் நானே வருவேன் திரைப்படம், தனுஷ் ரசிகர்கள் நீண்ட எதிர்பார்ப்புக்கு கிடைத்த விருந்தாக அமைய வாய்ப்பிருக்கிறது.

நானே வருவேன் திரைப்படம் தனுஷ், இயக்குனர் செல்வராகவனுக்கு நிச்சயமாக நல்ல ஒரு கம்பேக் ஆக அமையும் என்று கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழு வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இயக்குனர் செல்வராகவன் சமீபகாலமாக இயக்குவதை காட்டிலும் நடிப்பதில் அதிக ஆர்வம் கட்டுவதால், அவருடைய ரசிகர்கள் தன்னை இயக்குனராகத்தான் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தனுஷ் இரட்டை வேடத்தில் நானே வருவேன் படத்தில் நடித்திருக்கும் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து திரைக்கு காத்திருக்கும் நிலையில் ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழு வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்கப்படுகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version