Home Cinema News Kollywood: சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

Kollywood: சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

53
0

Suriya 42: இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூரியா நடிப்பில் மிக பிரமாண்டமாக ‘சூரியா 42’ என்ற திரைப்படம் உருவாகி கொண்டிருக்கிறது. படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு வெளியாக இன்னும் 24 மணி நேரமே உள்ளது. ரசிகர்களால் தங்கள் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியாமல்,  தலைப்பு என்னவாக இருக்கும் என்று ஆவலுடன் இருக்கின்றனர். சூரியாவின் கேரியரில் பிரமாண்டமான பொருள் செலவில் எடுக்கப்பட்ட படம் என்றே கூறலாம்.

ALSO READ  Thiruchitrambalam: உலகளவில் திருச்சிற்றம்பலம் 2ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

Kollywood: சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

தற்போது ஹாட் செய்தி என்னவென்றால், இந்த படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் வாங்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அன் நிறுவனம் இசை உரிமையை மிக பெரிய விலைக்கு பெற்றிருப்பதாக பேசப்படுகிறது. இப்படத்தை 10 மொழிகளிலும், 3டி பதிப்பிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ALSO READ  Garudan Box Office Collection Day 3: கருடன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மூன்றாம் நாள் நிலவரம்

இப்படத்தில் கதாநாயகியாக திஷா பதானி நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் சார்பில் ஞானவேல்ராஜா, வம்சி, பிரமோத் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். ராக் ஸ்டாரான அணிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தலைப்புடன், ரிலீஸ் தேதி அறிவிப்பும் நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply