Home Cinema News Dhanush new movie: பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம் – தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்...

Dhanush new movie: பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம் – தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் யார் தெரியுமா?

0

Dhanush: தனுஷிடம் வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் போன்ற சில நம்பிக்கைக்குரிய படங்கள் உள்ளன. தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் அவரது அடுத்த படம்  இன்று ஹைதராபாத்தில் முறையான பூஜையுடன் தொடங்கியது என்று சமீபத்திய அதிகாரபூர்வ அப்டேட் .

Dhanush new movie: பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம் - தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் யார் தெரியுமா?

முன்னதாக, ஜூன் 2021 இல், சேகர் கம்முலா தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைய போவதாக சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதை பற்றி சேகர் கமுலா தனது டிவிட்டர் பக்கத்தில் “உண்மையாகவே உற்சாகமாக இருக்கிறது. நாராயண தாஸ் கே நரங் காரு என் புஸ்கூர் ராம் மோகன் ராவ் காருவுடன் தொடர்வதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தை நாராயண தாஸ் கே நரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி (ஏசியன் குழுமத்தின் ஒரு யூனிட்) மூலம் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். ஒரு ஆக்‌ஷன்-சாகச படம் என்று கூறப்படும் இந்த படம் 1930 இந்தியாவின் பின்னணியில் அமைக்கப்படும்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version