Home Cinema News Captain Miller: தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் போர் சீக்வென்ஸ் காட்சிகள் கசிந்து – அதிர்ச்சியில்...

Captain Miller: தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் போர் சீக்வென்ஸ் காட்சிகள் கசிந்து – அதிர்ச்சியில் படக்குழுவினர்

63
0

Captain Miller: தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தென்காசி அருகே உள்ள வனப்பகுதியில் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் போர் காட்சிகளை ஒருவர் பதிவு செய்து அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் விரைவான நடவடிக்கை எடுத்து வீடியோக்களை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றுவதை உறுதி செய்தது.

ALSO READ  Kollywood: புதிய படத்தில் இணையும் வெற்றிமாறன் மற்றும் ராகவா லாரன்ஸ்

Also Read: ஷங்கர் இயக்கும் RC 15 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, செல்போன், வீடியோ கேமராக்க செல்ல தடை விதிக்கப்பட்டு, பொதுமக்கள் அப்பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சிகளைப் பார்த்தவர்கள், போர்க் காட்சிகள் உண்மை காட்சிள் என்றும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் உண்மையாக எடுக்கப்பட்டவை என்றும் சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. அருண் மாதேஷ்வரனின் தொலைநோக்கு பார்வை மற்றும் கடின உழைப்புக்கு பாராட்டுக்கள் குவியும் அளவுக்கு இந்த காட்சிகள் அதிரடியாக உள்ளது.

ALSO READ  Suriya 42: சூர்யா 42 பூஜை தேதி அறிவிப்பு - இரண்டு பாகங்களாக பிரமாண்டமாக உருவாகவுள்ளது

Captain Miller: தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தின் போர் சீக்வென்ஸ் காட்சிகள் கசிந்து - அதிர்ச்சியில் படக்குழுவினர்

இது ‘கேப்டன் மில்லர்’ படத்தின் க்ளைமாக்ஸ் போர்க் காட்சிகள் என்றும், படத்தின் முழு படப்பிடிப்பும் விரைவில் முடிவடையும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன் மற்றும் நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Leave a Reply