Home Cinema News Dhanush: மாறன் ரிலீஸ் அப்டேட்டால் குஷியான தனுஷ் ரசிகர்கள்

Dhanush: மாறன் ரிலீஸ் அப்டேட்டால் குஷியான தனுஷ் ரசிகர்கள்

64
0

Dhanush: தனுஷ் நடித்து வரும் இருக்கும் மாறன் படம் எப்போது வரும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். தற்போது மாறன் படம் வெளியாகும் தேதி பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Dhanush: மாறன் ரிலீஸ் அப்டேட்டால் குஷியான தனுஷ் ரசிகர்கள்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாறன். இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் கலந்த இந்த படத்தில் சமுத்திரக்கனி, மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், பாலசுப்ரமணியன், கிருஷ்ணகுமார், மகேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மாறன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

ALSO READ  Dhanush: தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் தனுஷ் நடிக்கும் மும்மொழி படம்

கடந்த 2020ம் ஆண்டு மே மாதமே ஷுட்டிங்கை துவக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக மாறன் படம் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையுடனேயே நிறுத்த பட்டது. இருந்தாலும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை நிறுத்தாமல் செய்து வந்தார் இயக்குனர். லாக்டவுன் முடிந்ததுமே மாறன் என டைட்டில் போஸ்டருடன் அறிவித்தனர்.

தனுஷ் இந்த படத்தில் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனுஷுக்கு தங்கையாக ஸ்மிருதி வெங்கட் நடித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷுடன் சமுத்திரக்கனி நெகடிவ் ரோலில் இந்த படத்தில் நடித்துள்ளார். சென்னை, ஐதராபாத்தில் இந்த படம் எடுக்கப்பட்டது.

ALSO READ  GOAT: பிரபல VFX நிறுவனம் விஜய்யின் The GOAT படத்தில் இணைந்துள்ளது

Dhanush: மாறன் ரிலீஸ் அப்டேட்டால் குஷியான தனுஷ் ரசிகர்கள்

இந்நிலையில் மாறன் படத்தின் ரிலீஸ் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. மாறன் திரைப்படம் பிப்ரவரி 25 ம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். ஆனால் பிப்ரவரி 25 ம் தேதி முடியாமல் போனால் மார்ச் 4 ம் தேதி திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தற்போது இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை குஷியாகி உள்ளனர்.

Leave a Reply