Home Cinema News Chiyaan Vikram’s 61: பா. ரஞ்சித் புதிய படத்தில் சியான் விக்ரம் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Chiyaan Vikram’s 61: பா. ரஞ்சித் புதிய படத்தில் சியான் விக்ரம் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0

Chiyaan 61-விக்ரமின் புதிய படத்தை பா. ரஞ்சித் இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார்.

vikram

விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’, அவரது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் ‘மகான்’. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘மகான்’ படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

‘மகான்’ திரைபடம் ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாக  உருவாகி வருகிறது. முதன்முறையாக தனது மகன் துருவ்வுடம் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தற்பொழுது விக்ரமின் ‘சியான் 61’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்ரமின் அடுத்த படத்தை பா. ரஞ்சித் இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

பா.ரஞ்சித்தின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பலவித பாராட்டுக்களை பெற்றது. இதனை தொடர்ந்து ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்தார் பா. ரஞ்சித்.

பா. ரஞ்சித்தும், விக்ரமும் புதிய படத்தில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version