CBFC: திரைப்படத் துறையில் தணிக்கை என்பது இன்றியமையாதது. அந்தந்த தணிக்கை வாரியங்கள் அந்தந்த வயதினருக்கு ஏற்ற உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. தற்போது, இந்தியாவில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழின் பணியகம் (CBFC) திரைப்படங்களை மூன்று பிரிவுகளின் கீழ் மதிபீட்டிருந்தது பொதுவாக U, U/A மற்றும் A போன்ற சான்றிதல்கள் மட்டுமே இருந்தது.
‘யு’ சான்றிதழைப் பெற்ற திரைப்படத்தை எந்த வயதினரும் எந்தத் தடையுமின்றிப் பார்க்க முடியும் என்றாலும், ‘யு/ஏ’சான்றிதல் பெற்ற படங்களை அனைவரும் பார்க்கலாம், ஆனால் குழந்தைகள் அந்தப் படங்களை பெற்றோரின் வழிகாட்டுதலுடன் பார்க்க வேண்டும். CBFC ஆல் ‘A’ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் (பெரியவர்கள்) மட்டுமே பார்க்க வேண்டும்.
இப்போது, ஒளிப்பதிவு திருத்த மசோதா, 2023ல் அறிமுகப்படுத்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கோரிக்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இனிமேல், திரைப்படங்கள் வயதுக்கு ஏற்ப ஐந்து வகைகளின் கீழ் மதிப்பிடப்படும். அதாவது ஐந்து புதிய வகைப்பாடுகள் என்னவென்றால் U, U/A 7+, U/A 13+, U/A 16+ மற்றும் A என்று இந்த புதிய வகைப்பாடுகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன:
1) (U) யு-ரேட்டிங் பெற்ற படங்களை அனைவரும் பார்க்கலாம்.
2) U/A 7+ ரேட்டிங் பெற்ற படங்களை 7 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
3) U/A 13+ ரேட்டிங் பெற்ற படங்களை 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
4) U/A 16+ ரேட்டிங் பெற்ற படங்களை 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
5) (A) ஏ தரமதிப்பீடு பெற்ற திரைப்படங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம்.
என்று ஐந்து புதிய வைகைபடுகளின் கீழ் மதிபீட்டுள்ளனர்.