Home Cinema News Good Bad Ugly: அஜித் குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பாலிவுட் வில்லன்

Good Bad Ugly: அஜித் குமார் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் பாலிவுட் வில்லன்

152
0

Good Bad Ugly: தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் பிஸியாக இருக்கும் அஜித் குமார், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ‘குட் பேட் அக்லி’ என்ற பிரம்மாண்ட படத்தை தொடங்க உள்ளார். ஜூன் 13-ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கும் வகையில் சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைத்து படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக நாம் ஏற்கனவே செய்திகள் பார்த்தோம்.

ALSO READ  Lawrence: சந்திரமுகி 2 மாஸ் அப்டேட் - இணையும் த்ரிஷா

இப்படத்தில் அஜித் குமார் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வில்லன் நடிகர்கள் தேர்வு குறித்த சமீபத்திய செய்தி ஆதாரங்களின்படி, பாலிவுட் நட்சத்திரங்களான பாபி தியோல் அல்லது ஜான் ஆபிரகாமை அணுக குழு திட்டமிட்டுள்ளது. ஜான் ஆபிரகாம் தமிழ் சினிமாவில் புதிய வில்லனாக வருவார் என்பதால் அவரை நடிக்க வைக்க படக்குழு தரப்பு ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ  KH 234: இந்தியாவின் மிகப் பெரிய மல்டி ஸ்டார்களுடன் வரலாற்றை உருவாக்க முடிவு செய்த மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன்

Good Bad Ugly: அஜித் குமார் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் பாலிவுட் வில்லன்

‘குட் பேட் அக்லி’ பொங்கல் 2025 அன்று திரையரங்குகளில் வர உள்ளது. இப்படத்தின் இசையை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பைக் கையாளுகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு உலக அளவில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

Leave a Reply