Home Cinema News LEO: விஜய்யின் லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கும் அற்புதமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

LEO: விஜய்யின் லியோ படத்திற்கு அனிருத் இசையமைக்கும் அற்புதமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

0

LEO: அனிருத் ரவிச்சந்தர் தற்போது கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட் மற்றும் பாலிவுட்டிலும் இசை அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டில் ‘டாக்டர்’, ‘பிஸ்ட’, ‘டான்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’, ‘விக்ரம்’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ என தொடர்ச்சியான பிளாக் பாஸ்டர் படங்கள் வழங்கினார். அனிருத் இப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’, உலகநாயகன் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, தளபதி விஜய்யின் ‘லியோ’ மற்றும் ஜூனியர் என்டிஆர் 30 போன்ற பிரமாண்டங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

Aso Read: சூர்யா 42 படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் கண்டிராத ஸ்டண்ட் சீக்வென்ஸ் செய்ய படக்குழு திட்டம்

இதற்கிடையில் சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தின் தலைப்பு அறிவிப்பு ப்ளடி ஸ்வீட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபல கிதார் கலைஞரான ஜெரேமியா, அனிருத் இசையமைக்கும் ஒரு அற்புதமான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இந்தப் பாடலை முழுமையாக ஆங்கிலத்தில் ஹைசன்பெர்க் எழுதியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘லியோ’. ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பு பிலோமின் ராஜ், கலை இயக்கம் சதீஷ்குமார், ஸ்டண்ட் இயக்கம் அன்பரிவ், நடன இயக்கம் தினேஷ் ஆகியோர் கையாளுகிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version