Home Cinema News Ajith 61: அஜித் புதிய படத்தின் துவங்கவுள்ள தேதி அறிவிப்பு

Ajith 61: அஜித் புதிய படத்தின் துவங்கவுள்ள தேதி அறிவிப்பு

0

Ajith 61: அஜித், வினோத் கூட்டணியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் தேதி வெளியானது.

ajith

வினோத் இயக்கதில் அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். சமீபத்தில் வலிமை ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. தற்போது ஒமிக்கரன் வைரஸ் பரவல் அதிகரிப்பால் வரைஸ் கட்டுப்பாடுகளினால் வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகுமா ஆகாதா என்று பெரும் குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது நிலையில் அஜித்தின்(அஜித் 61)அடுத்த படத்தைப்பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அஜித் – வினோத் கூட்டணியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட விஷயம் அனைவருக்கும் தெரியும்.  இந்நிலையில் தற்போது அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் தேதி வெளியானது. இப்படத்தின் பூஜை ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை என்பதால் தழியாக அரசு தற்போது தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், ஜனவரி 16 தேதி மாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் ஜனவரி இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ படப்பிடிப்பு துவங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு பதிலாக அஜித் 61 படத்தில் அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இப்படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ போனி கபூர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version