Maddy Biopic: மாதவன் இன்று இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குனராக இருக்கிறார். கடந்த ஆண்டு முதல் முதலாக தனது இயக்கத்தில் வெளிவந்த ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ மூலம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியைப் பெற்றார். இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் சர்ச்சைக்குரிய வாழ்க்கையைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நாடகமாகும். நடிகர் மாதவன் மீண்டும் ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கபோவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இந்திய கண்டுபிடிப்பாளர் மற்றும் பொறியாளரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க மீண்டும் களம் இறங்குகிறார் மாதவன். ஜி.டி நாயுடு அவர் “இந்தியாவின் எடிசன்” மற்றும் “கோவையில் செல்வத்தை உருவாக்கியவர்” என்று குறிப்பிடப்படுகிறார்கள். அதோடு இந்தியாவில் முதல் மின்சார மோட்டாரை தயாரித்த பெருமையும் இவருக்கு இருகிறது.
ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை விளக்கும் இந்தப் படத்தை மீடியாஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை பற்றி தயாரிப்பாளர்கள் ஒரு கான்செப்ட் போஸ்டருடன் அறிவித்தனர், அது சமூக ஊடகங்களில் வைரலானது. படகுழுவினர் படத்தின் விஷயங்களை இறுதி செய்யும் போது நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் தெரியவரும். இது ஒரு பன்மொழி முயற்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேலை முன்னணியில், மாதவன் ‘திருச்சிற்றம்பலம்’ இயக்குனர் மித்ரன் ஜவஹருடன் ஒரு படம், ‘அம்ரிகி பண்டிட்’ என்ற இந்தி படம் மற்றும் சி சங்கரன் நாயரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஆகியவற்றையும் கைவசம் வைத்திருக்கிறார்.