Home Cinema News Pathu Thala: சிம்பு நடித்த பத்து தல ஆடியோ வெளியீட்டு விழா குறித்து புதிய அப்டேட்...

Pathu Thala: சிம்பு நடித்த பத்து தல ஆடியோ வெளியீட்டு விழா குறித்து புதிய அப்டேட் வெளியானது

0

Pathu Thala: சிம்பு நாயகனாக நடிக்கும் பத்து தல படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தை ஒபேலி என் கிருஷ்ணா இயக்குகிறார். மேலும் இதில் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்க, ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்து தல படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனும் வில்லனாக நடிக்கிறார். மேலும் ‘இசை புயல்’ ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளர்.

Pathu Thala: சிம்பு நடித்த பத்து தல ஆடியோ வெளியீட்டு விழா குறித்து புதிய அப்டேட் வெளியானது

இப்படத்தின் ட்ரைலர் ஒரு வாரத்திற்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டனர், ட்ரைலர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் அரசு அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 18 அன்று மாலை 5 மணி முதல் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.டி.ஆர் மற்றும் படத்தின் இயக்குனர் உட்பட நடிகர்கள் மற்றும் குழுவினர், நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

சிம்புவின் முந்தைய படமான வெந்து தனித்து காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படத்திற்கு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு கமல்ஹாசன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டதால், பத்து தல படத்துக்கு சிறப்பு விருந்தினரா வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். பத்து தல படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version