Home Cinema News Vijay: வாரிசு படத்தின் முக்கிய அப்டேட்

Vijay: வாரிசு படத்தின் முக்கிய அப்டேட்

50
0

Vijay: வாரிசு படம் செப்டம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடித்துவிட்டு 2023 பொங்கல் அன்று திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: Simbu: சிம்பு வெளியிட்ட வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்!

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் தனது 66வது படமான வாரிசு படப்பிடிப்பில் தற்போது பிஸியாக உள்ளார், மேலும் படக்குழு இந்த வார தொடக்கத்தில் ஹைதராபாத்தில் படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பை முடித்தது வீடு திரும்பினார்கள். ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் விஜய், சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் அடுத்த ஷெட்யூலைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டார் விஜய் என்று தெரிவித்தனர். மற்றும் விஜய்யுடன் நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், ஷாம் ஆகியோரும் சென்னை திரும்பியுள்ளனர். கணேஷ் வெங்கட்ராம், விமான நிலையத்தில் நடிகர் ஷாமுடன் நடித்த சில படங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ALSO READ  Kajal Agarwaal: தனி விருந்துடான் தனது மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாடிய காஜல் - வெளியான வைரல் புகைபடங்கள்

Vijay: வாரிசு படத்தின் முக்கிய அப்டேட்

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் பிரகாஷ் ராஜ் மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர், மேலும் பிரபு, ஜெயசுதா, ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் யோகி பாபு ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் குடும்பம் சார்ந்த கதை என்றும், ஆக்‌ஷன், மாஸ் காட்சிகள் மற்றும் பாடல்கள் நிறைந்த ஃபீல்-குட் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்னையில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்திற்குள் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

ALSO READ  Sardar new update: கார்த்தியின் சர்தார் படத்தின் பற்றிய ரசிகர்களுக்கு உற்சாகமான அப்டேட்

Also Read: Suriya: சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் புதிய படம்

வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர். எஸ் தமன் முதன்முறையாக விஜய்க்கு இசையமைக்கிறார், கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார், பிரவீன் கேஎல் படத்தொகுப்பைக் கையாளுகிறார். இந்நிலையில் படம் 2023 பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

Leave a Reply