Home Cinema News Kollywood: ஜெயிலர் படத்தின் 343 காட்சிகள் ஹவுஸ்புல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Kollywood: ஜெயிலர் படத்தின் 343 காட்சிகள் ஹவுஸ்புல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

57
0

Kollywood: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய ரஜினிகாந்த் நடித்த பிளாக் காமெடி-அதிரடித் திரைப்படம் ஜெயிலர். தற்போது ரஜினிகாந்த் ரசிகர்களின் உற்சாகத்தின் உச்சியில் உள்ளார்கள். ஜெயிலர் படத்தின் அனைத்து காட்சிகள் டிக்கெட்கள் சென்னையில் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் அதாவது ஜெயிலர் படத்தின் 343 காட்சிகள் ஹவுஸ்புல் என்று, படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருவதாக செய்திகள் வைரலாகி வருகிறது.

Also Read: உலகின் பொழுதுபோக்கு தலைநகரில் இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஜெயிலரில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற ஜெயிலராக நடித்துள்ளார், அவர் சிறையில் இருக்கும் பிரபல குற்றவாளிகளின் குழுவை சமாளிக்கிறார். இப்படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா மேனன் மற்றும் தமன்னா பாட்டியா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

ALSO READ  Kollywood: 'லியோ'வில் விக்ரமின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் வருவது உறுதி?

Kollywood: ஜெயிலர் படத்தின் 343 காட்சிகள் ஹவுஸ்புல் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

இப்படம் 10 ஆகஸ்ட் 2023 அன்று வெளியகயுள்ளது, இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மற்றும் பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. மேலும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் என்ற தீம் பாடள் மற்றும் காவாளா பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜெயிலர் என்பது ரஜினிகாந்தின் 169வது படம் மற்றும் ரஜினிகாந்த், நெல்சனுடன் முதல் .கூட்டணி குறிக்கிறது.

Leave a Reply