’நேர்கோண்ட பார்வை’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் நிலையில் அஜித்தின் அடுத்த படமான ‘தல 60′ படத்தின் பூஜை வரும் ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும் என போனிகபூர் சமீபத்தில் டுவீட் ஒன்றின் மூலம் தெரிவித்தார். ‘தல 60’ படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் விரைவில் தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த படத்தில் சில பிரபலங்கள் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக இந்த படத்தின் நாயகியாக போனிகபூர்-ஸ்ரீதேவி தம்பதியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அதேபோல் ‘தல 60’ படத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ALSO READ Thangalaan: சீயான் விக்ரமின் 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் பற்றி பா.ரஞ்சித் தெளிவுபடுத்தினார்