Home Cinema News வேற லெவல் கம்பேக்: சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

வேற லெவல் கம்பேக்: சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

47
0

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்துள்ளார். ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

maanadu

இந்நிலையில் மாநாடு படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கல்யாணி ‘மாநாடு’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, பிரேம்ஜி மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ALSO READ  Bigg Boss S6: பிக் பாஸ் சீசன் 6-யில் இந்த வாரம் வெளியேற பரிந்துரைக்கப்பட்ட போட்டியாளர்கள்

அண்மையில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் துவங்கியது. சில மாதங்களுக்கு முன்பாக ‘மாநாடு’ படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடி இருந்தனர். 

மாநாடு

இந்நிலையில் நேற்றைய தினம் ‘மாநாடு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிலம்பரசன், எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தப்படம் சிம்புவுக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமையும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.

ALSO READ  Kollywood: ஜெய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'தீராக் காதல்' படத்தின் அட்டகாசமான டிரெய்லர் இதோ!

தற்போது ‘மாநாடு’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. ‘மாநாடு’ படம் நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply