Home Cinema News வெள்ளத்தில் மிதக்கும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்புத்தளம்.

வெள்ளத்தில் மிதக்கும் ‘பீஸ்ட்’ படப்பிடிப்புத்தளம்.

39
0

நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. 

வெள்ளத்தில் மிதக்கும் 'பீஸ்ட்' படப்பிடிப்புத்தளம்.

கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. அப்போது விஜய் சம்பந்தமான காட்சிகளும், பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

ALSO READ  Indian 2: இந்தியன் 2 படத்திற்கு பாலிவுட் டாப் ஹீரோயின்

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லன்களாக நடித்து வருவகின்றனர். சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து முடித்துள்ள செல்வராகவன் அடுத்ததாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார்.

சென்னை புறநகரில் உள்ள ஸ்டுடியோவில் பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

ALSO READ  Kaithi 2: கார்த்தியின் கைதி 2 படப்பிடிப்பு இந்த நேரத்தில் தொடங்குகிறது

கனமழையால் ‘பீஸ்ட்‘ படத்திற்காக போடப்பட்ட ஷாப்பிங் மால் அரங்கைச் சுற்றி மழை நீர் தேங்கி நிற்கிறது. எனினும் அரங்குக்குப் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள படப்பிடிப்பு பணிகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply