Home Cinema News லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவுக்கு சம்பளம் எவ்ளோ தெரியுமா?

லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவுக்கு சம்பளம் எவ்ளோ தெரியுமா?

42
0

மலையாளம் லூசிஃபர் படத்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் மோகன்ராஜா. அந்த படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவுக்கு ஜோடியாக சத்யதேவ் நடிக்கிறார்.

chiranjeevi

படம் முழுக்க வரும் முக்கிய கதாபாத்திரமாக இல்லாவிட்டாலும், லூசிஃபர் ரீமேக்கிற்காக நயன்தாரா ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 4 கோடி கொடுத்திருப்பது தெலுங்கு திரையுலகில்  இதுவே முதல் முறை ஆகும்.  

ALSO READ  Hot update: விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் பற்றி கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் உற்சாகமான அப்டேட்

லூசிஃபர் ரீமேக்கில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று சிரஞ்சீவி கூறினாராம். அதன் பிறகே நயன்தாராவை ஒப்பந்தம் செய்தாராம் மோகன்ராஜா. நயன்தாரா சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தின் இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடித்திருக்கிறார். ஹீரோ விஜய் சேதுபதி  நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply