Home Cinema News திரையரங்கு வளாகதிற்குள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.

திரையரங்கு வளாகதிற்குள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.

50
0

தமிழகத்தில் நவ.10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

Pocket Cinema News

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

1. திரையரங்க வளாகத்திற்குள் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். முககவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது.

2. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து திரைபடம் பார்க்க அனுமதிக்க வேண்டும். 

ALSO READ  Nayanthara: திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சம்பளம் - எத்தனை கோடி தெரியுமா?

3. திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

4. திரையரங்கின் நுழைவாயிலில் மக்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். 

5. பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் வரும் வகையில் குறியீடுகள் வைக்க வேண்டும்.  

ALSO READ  Official: ராகவா லாரன்ஸ்சின் சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கபட்டுள்ளது.

6. திரைப்படத்தின் இடைவேளையின்போது மக்கள் வெளியே வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

7. ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும்.

தமிழக அரசு அறிக்கயில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Leave a Reply