Home Cinema News சண்டை காட்சிகள் காரணம் காட்டி ‘மாஸ்டர்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளிக்க மறுத்த தணிக்கை...

சண்டை காட்சிகள் காரணம் காட்டி ‘மாஸ்டர்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளிக்க மறுத்த தணிக்கை குழு

51
0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும்  விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனாவால் நின்று போனது. மாஸ்டர் படத்தை நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்ததாக செய்தி சமூக வளைய தளங்களில் பரவியது. 

Pocket Cinema News

இருப்பினும் தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தலால் மற்றும் தளபதி விஜய் ரசிகர்களுக்காக ஓ.டி.டி. முடிவை முற்றிலும் கைவிடப்பட்டது. மாஸ்டர் திரைபடம் பொங்கலுக்கு தியேட்டர்களில் திரையிட தயாராவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். 

ALSO READ  Thalapathy 68: 18 வருடங்களுக்கு பிறகு 'தளபதி 68' படத்தில் விஜய்யுடன் இணையும் பிக் பாஸ் நடிகர்

Also Read: சூரியாவுடன் சைக்கிள் பயணம் செய்த தல அஜீத்… வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு தணிக்கையில் ‘யூ’ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சண்டை காட்சிகள் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

Leave a Reply